ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தையொட்டி மக்கள் சமூக வலை தளத்தில் தேசிய கொடியை முகப்பு பக்கத்தில் பதிவிட வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் முகப்பு படத்தில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர தினத்தன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ஆக.13 முதல் 15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களது சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து தனது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் தேசிய கொடியை மோடி பதிவிட்டிருந்தார். இதை பின் தொடர்ந்து பல கட்சி தலைவர்கள், முதல்வர் உட்பட அனைவரும் தேசியக்கொடியை டிபியாக மாற்றினர். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது முகப்பு படத்தில் தேசிய கொடியை மாற்றி உள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது . பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் முகப்பு தளத்தில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.