• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கிருஷ்ணன்கோயில் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் திட்டம்

Byதரணி

Apr 24, 2023

கிருஷ்ணன்கோயில் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடநீர் திட்டத்தின் மூலமாக புதிய குடிநீர் குழாய் திட்டம் ரூ.15 லட்சம் செலவில் செயல்படுத்தபட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் பகுயில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தாமிரபரணி கூட்டு குடிநீர்த்திட்டம் மூலம் குடி நீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் நீரை மேல்நிலை தோட்டியில் ஏற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டதில் கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுத்தபடவில்லை. தற்போது தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க விலுப்பனூர் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டின் படி இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ரூ15 லட்சம் செலவில் மேல்நிலை தொட்டியில் குடி நீர் ஏற்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு, குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.


தற்போது இப்பணிகள் முடிந்த நிலையில் அப்பகுதிகளுக்கு குடிநீர் குழாய்களை பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். புதிய குடிநீர் குழாய் துவக்க நிகழ்ச்சியில் திருவில்லபுத்தூர் சேர்மன் கு.ஆறுமுகம், மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தால் பயன்பெற்ற பொதுமக்கள் திருவில்லபுத்தூர் சேர்மன் கு.ஆறுமுகம், விலுப்பனூர் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டினர்.