• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம்…

Byகாயத்ரி

Apr 19, 2022

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க டிட்கோவுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதனைப்போலவே சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை இந்திய விமான நிலையம் சமர்ப்பித்துள்ளது. விமான போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை என தொழிற்சாலை மாநில கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதற்கட்ட பணிகள் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.