• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை!!

BySeenu

Feb 19, 2026

கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடை, வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டில் ஏதாவது உணவு கிடைக்குமா ? என உள்ளே நுழைய முயன்று உள்ளது.

அப்போது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் விளக்கை போட்டதும் காட்டு யானை விளக்கு வெளிச்சத்திற்கு பயந்து அப்படியே பின்னால் சென்று அருகில் இருந்த செடிகளை சாப்பிட்டு விட்டு சென்று உள்ளது. இவை அனைத்தும் அவரது வீட்டில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவது தொடர்ந்து வருவதாகவும், கோடை காலம் வர உள்ளதால் வனவிலங்குகளுக்கு வனப் பகுதிகளிலேயே உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை, தடாகம் அருகே பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள முத்துக்குமார் என்பவர் தோட்டத்தில் வீட்டின் அருகே இருந்த கால்நடைகள் தொழுவத்திற்கு நேற்று இரவு உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானையின் சி.சி.டி.வி காட்சிகள்..