• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு

Byp Kumar

Mar 26, 2023

தென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் பிரிவுக்கு என்று தனியாக தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப் பட்டுள்ளது இது குறித்து நரம் பியல் துறை டாக்டர்கள் சியாம், கார்த்திக், ராஜன், மீனாட்சி சுந்தரம் மற்றும் நரம் பியல் மயக்கவியல் டாக்டர் நிஷா ஆகியோர் கூறியது
பொது மருத்துவத்துறையில் தீவிர சிகிச்சை பிரிவு எவ்வளவு அவசியமானதோ அதே போன்று மூளை, நரம்பியல் துறையிலும் தீவிர சிகிச்சை பிரிவு மிகவும் அவ சியமாக உள்ளது. சாதாரண நோயாளிகள் போன்று இல்லாமல் நரம்பியல்நோயாளிகளுக்கு சிறந்த மேற்பார்வை, தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படுகிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் நரம்பியல் நிபுணர் மருத்துவக்குழு கொண்ட பிரிவு தனிப்பிரிவு தேவை. அப்பல்லோ மருத்துவமனையில் அமைந்துள்ளதால் தென் தமிழகத்தில் முதன் முறை யாக இந்த மூளை நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு அமைக் கப்பட்டுள்ளது.விபத்தினால் ஏற்படும் தலைக்காயம் மற்றும் பக்கவாதத்தால் மூளை, நரம்புகளில் பாதிப்பு ஏற்படும் போது அந்த ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது இதை கோல்டன் ஹவர்ஸ் என்கின்றனர். இந்த நேரத்தில் முறையாக சிகிச்சை அளித்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களை கோமா நிலையிலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பாற்றி விடலாம். இதற்கு நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு மிகவும் முக்கியமானது.அந்த பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளி களை கண்காணிக்க, சிகிச்சை அளிக்க பிரத்யேகமான பயிற்சி மருத்துவக்குழு தேவைப்படுகிறது.


அதற்காக இன்றும், நாளையும் 2 நாட்கள் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் துறை தீவிர சிகிச்சை பிரிவு குறித்த பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.இப்பயிற்சி பட்டறையில் இந்தியாவின் டெல்லி எய்ம்ஸ். சண்டிகர் பி.ஜி.ஐ. பெங்களூரு நிம்ஹன்ச், வேலூர்சி.எம்.சி. உள்பட பல் வேறு மருத்துவமனைகளை சேர்ந்த 60 பிரதிநிதிகள், பேரா சிரியர்கள் கலந்து கொள்கின்றனர் .இதில் டாக்டர்கள் சுந்தர் ராஜன். ஜோசப், வர்த்தக பிரிவு மண்டல பொது மேலா ளர் மணிகண்டன் தலைமை அதிகாரி நிகில் திவாரி உள் பட பலர் பங்கேற்றனர்.