• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

#BoomerTeacher சபரிமாலாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பெண் விடுதலை கட்சி நிறுவனதலைவர் சபரிமாலாவல் சர்ச்சைக்கருத்தினால் கொந்தளிக்கும் மக்கள்….


தன்னுடைய காணொலியால் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறார் பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா இவர் அரசுக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ஆசிரியர் பணியே விட்டு விலகினார் .


தற்சமயம் அவருடைய செயலால் பலரும் இவர் நல்ல வேல ஆசிரியராக இல்லை இருந்திருந்தால் பலருடைய வாழ்க்கை பாதையும் திக்குமுக்காடிடும் .


அந்த காணொலி வெறுவொன்றுமில்லை சபரிமாலா பங்கேற்ககூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட அவர் பெண் பிள்ளைகள் என்னதான் ஆடைகள் அணிந்திருந்தாலும் கூட அதற்குமேல் துப்பட்டா கண்டிப்பாக போடவேண்டும் எனவும் அதாவது ( துப்பட்டா போடுங்க தோழி ) மாதிரி.

அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் பள்ளிக்கு சென்ற அவர் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பள்ளி அறையின் செயல்பாட்டினை குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பெண்கள் பள்ளியில் வகுப்பின் மூளைப்பகுதியில் தனியாக ஒரு அறை அந்த அறையில் பெண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி என்பதால் வகுப்பெடுக்க வரும் ஆண் ஆசிரியர் அந்த அறையினுள் அமர்ந்தே வகுப்பெடுப்பார்,


அப்படியே ஏதேனும் எழுதி காட்டவேண்டுமென்றால் இழுக்கும் கரும்பலகையில் எழுதி அதனை மற்றொரு ஆசிரியர் உதவியுடன் அதனை வெளியில் அனுப்புவார். மாணவிகளிடமிருந்து புத்தகம் கொடுக்கனும் , வாங்கனும் என்றாலும் கூட அந்த அறையிலிருந்து, சிறிய வெளியின் வழியே கொடுப்பார் ஆண் ஆசிரியர். அதனையும் அங்கே உள்ள பெண் ஆசிரியர் வாங்கிகொடுப்பார்.
பெரியார்மண், பெண்கல்வி, ஆண் பெண் சமம் , என காலம் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோவை தான் வரவேற்பதாகவும் சபரிமாலா தெரிவித்திருப்பது. பெரும் சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது.