• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நெல்லியாளம் டி.பி.ஓ., அறிவுடைநம்பிக்கு அடி உதை?

Byadmin

Dec 10, 2022

பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி நகரமைப்பு அலுவலராக அறிவுடை நம்பி பணியாற்றி வருகிறார். இவரிடம் பிரசாந்த் என்பவர் கட்டுமான பணி மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். அனுமதிக்காக, நகரமைப்பு அலுவலரின் நண்பர் ஒருவர் பணம் பெற்றதாக நகரமன்ற தலைவருக்கு புகார் வந்துள்ளது. நகரமன்ற தலைவர் சிவகாமியின் உதவியாளர், எடுபிடி என எல்லாமே சைபுல்லா, என்பவர்தான் என்பது அப்பகுதி மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இதை கேள்விபட்டதும் சைபுல்லாவும், அவரது நண்பர் மணிகண்டனும், நகரமைப்பு அலுவலர் அறிவுடைநம்பியிடம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்து ஒரு கட்டத்தில் தாக்குதலும், நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சைபுல்லா மற்றும் மணிகண்டன் மீது, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அறிவுடைநம்பி தேவாலா போலீசில் புகார் கொடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
இதேபோல, நகரமைப்பு அலுவலர் அறிவுடைநம்பி மீது நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி, எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே அறிவுடைநம்பி குன்னூரில் பணிபுரிந்தபோது சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், அதன் பிறகு கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து நெல்லியாளத்திற்கு பணியிட மாற்றம் ஆகியுள்ளார்.
அதன்பிறகு உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு லஞ்சம் வாங்கித்தராததால் பணியிட மாற்றம் செய்துள்ளனர் என வாட்ஸ்அப்களில் பகிரங்க வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடதக்கது.