உதகை, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோஹினி பகுதி அருகே 10 அடி ஆளமுள்ள கிணற்றில் கன்று குட்டி தவறி விழுந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பத்துறையினர் கன்று குட்டியை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு கன்றுகுட்டியை கயிறு மூலம் மேல் பகுதிக்கு கொண்டு வந்து மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.