• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செப்.7 வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்..

ByA.Tamilselvan

Sep 6, 2022

நாளை (செப்டம்பர் 7) இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 91,000க்கும் அதிமான எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் 313 பல் மருத்துவக் கல்லுரிகளில் 26,773 பிடிஎஸ் இடங்களுக்கும் உள்ளன. எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்த வரையில், 43,915 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும், 48,012 இடங்கள் அரசு கல்லூரிகளிலும் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. 543 நகரங்களில் 3800 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வினை 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து தேர்வெழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 21 ஆம் தேதியே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை ( செப்டம்பர் 7ம் தேதி ) வெளியாகிறது. அத்துடன் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ம் தேதி வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.