• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ்சோப்ரா..!

Byவிஷா

Jun 19, 2022

ஃபின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். டிரினிடாட்ரூடொபாகோ வீரர் கேஷோர்ன் வால்காட், கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோரை முறியடித்து 86.69 மீட்டர் தூரம் எறிந்து சோப்ரா தங்கம் வென்றார்.
சோப்ரா 86.69 மீ எறிந்து அதைத் தொடர்ந்து இரண்டு முறை ஃபவுல் செய்தார். பின்னர் அவர் மீதமுள்ள மூன்று வீசுதல்களை முயற்சி செய்வதிலிருந்து விலகினார், அவரது முதல் எறிதலே அவருக்கு தங்கம் பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு வலிமையாக அமைந்தது.
மழை பெய்ததால் போட்டியாளர்கள் கடும் சிரமப்பட்டனர். 3வது முயற்சியில் சோப்ரா மழையினால் ஸ்லிப் ஆனார். அதனால் அடுத்தடுத்த த்ரோவை அவர் வேண்டாம் என்று முடிவெடுத்தார், காயமடையும் ஆபத்து இருக்கிறது, இதனால் மற்ற முயற்சிகளிலிருந்து நீரஜ் சோப்ரா விலகினார். இருப்பினும், வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார., பீட்டர்ஸ் 84.75 மீட்டர் எறிந்து வெண்கலத்துடன் திருப்தியடைந்தார்.
இந்த வார தொடக்கத்தில், டோக்கியோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கம் வென்ற பிறகு தனது முதல் போட்டியில் பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி வென்றதோடு புதிய தேசிய சாதனையைப் படைத்தார். கடந்த ஆண்டு பாட்டியாலாவில் 88.07 மீ., தூரம் எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார். குர்டேனுக்குப் பிறகு, ஜூன் 30 ஆம் தேதி டயமண்ட் லீக்கின் ஸ்டாக்ஹோம் லெக்கில் சோப்ரா இடம்பெறுவார்.