• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் அருகே, வீட்டை சுற்றி தேங்கிய மழைநீர்… முதியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்…..

ByKalamegam Viswanathan

Dec 19, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. ராஜபாளையம் அருகேயுள்ள ஆவாரம்பட்டி, பண்ணையார் பங்களா, காமாட்சியம்மன் கோவில் பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் 2 முதிய பெண்கள் வசித்து வரும் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், மழைநீர் சூழ்ந்த வீட்டிற்குள் சிக்கியிருந்த 2 முதிய பெண்களை பத்திரமாக மீட்டு, உறவினர்கள் வீடுகளில் சேர்த்தனர்.