• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நயன்தார விவகாரம்- அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ByA.Tamilselvan

Oct 26, 2022

வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.
இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.
இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார். இந்த குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது.
இத்தம்பதியர்கள் (Intending Couple) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ICMR) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிய வந்தது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.