• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுவாமி தோப்பு தலைமை பதியில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம்.

தமிழக சட்டமன்றத்தில் பாஜகவின் தலைவரும், தற்போதைய திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் சாமிதேப்பு அய்யாவின் தலைமை பதியின் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாஜக அதன் ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார்.

முதல்வர் ஸ்டாலின் சட்ட மன்ற தேர்தல் காலத்தில் கொடுத்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பதவிக்கு வந்ததும், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10_குறைப்பாதாக சொன்னார். இன்று வரை குறைக்கவில்லை. மின்கட்டணம் உயர்வு, வீட்டு வரி அதிகரிப்புத்தான் நடந்தது.

தமிழகத்தில் பிரதமர் மோடியின் வீட்டு திட்டத்தில் முதல்வர் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விட்டு தமிழக அரசின் திட்டம் போல் காட்ட முயலுகிறார்.

நெல்லை சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருவது மூலம். 6_சட்டமன்ற தொகுதிகளில் புதிய திட்டங்களை உருவாக்கி அந்த மக்களுக்கு நன்மை கிடைக்க செய்வேன்.

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களது தொகுதி கூடுதலாக பயன் பெறும் என நம்புகின்றனர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.