• Mon. Apr 29th, 2024

முதல்வர் பிரச்சாரத்தின் சில நொடிகளுக்கு முன் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் இயல்பாகவே ஒரு காங்கிரஸ் சார்பு மாவட்டம். நாடாளுமன்றத் தேர்தல் இயல்பு கால இடைவெளியில் நடக்க இருக்கும் நிலையில், விஜயதரணி விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தகுதியை ராஜினாமா செய்த நிலையில், குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான விளவங்கோட்டை தமிழகமே திரும்பி பார்த்த நிலையில், சம்பந்தப்பட்ட தொகுதியில் இரண்டு தேசிய கட்சிகளும், இரண்டு மாநிலத்தின் கட்சிகளின் சார்பில் அனைத்து வேட்பாளர்களும் பெண்களாக அமைந்துள்ளது ஒரு அதிசயமே.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக வாய்பு கேட்டு இரு பாலினத்தவர்களும் வாய்பு கேட்டு மல்லு கட்டியது மட்டும் அல்ல. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாங்குநேரி பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், கடைசி நொடிகளில். திருநெல்வேலி மக்களவை மற்றும் விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக. நெல்லை தொகுதிக்கு வழக்கறிஞர் ராபர்ட் பூரூஸ், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு தாரைகை கத்பட் அறிவித்த நிலையில்,

குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் ஒரே கல்லில் காங்கிரஸ் மூன்று மாங்காய்களை பறிக்க போகிறது.

குமரி மாவட்ட அரசியல் ஒரு மதம் சார்ந்த மாவட்டமாகவும் உள்ளது. குமரி மாவட்டத்தில் 47_மீனவ கிராமங்களை கொண்டது.

குமரி மீனவ சமுகத்தின் சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற லூர்தம்மாள் சைமன். காமராஜர் அமைச்சரவையில் மீனவ வளத்துறை அமைச்சராக இருந்தார். அதற்கு பின் நீண்ட நெடிய வருடங்களுக்கு பின். குளச்சல் சட்டமன்ற தொகுதியில் இருந்து திமுக சார்பில் இரா.பெர்னாட் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் காலங்களில். குமரியின் ஒட்டுமொத்த மீனவ சமுகத்தினர் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என கேட்டுக் கொள்வதும். வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு அவர்களது ஒட்டு மொத்த ஆதரவை தெரிவிப்பது தான் ஒரு தொடர் கதை.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீனவ சமுகத்தை சேர்ந்த பசலியான் நசரேன் அதிமுகாவின் சார்பில் போட்டியிடும் இந்த நேரத்தில், விளவங்கோடு இடைத்தேர்தலில் மீனவ சமுகத்தை சேர்ந்த தாரகை கத்பட்டிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. குமரி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை,கனவை நிறை வேற்றியதின் மூலம். குமரி காங்கிரஸ் கட்சியின் ராஜதந்திரத்தின் தொலை நோக்கு பார்வையால்.

விஜய் வசந்த்திற்கு கடற் கரை மக்களின் பெரும் பான்மை வாகனங்கள் வழக்கத்தை விட கூடுதலாக கிடைப்பதுடன், விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் பாரம் பரிய வெற்றியை தக்கவைக்கும் அரசியல் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இரக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ராபர்ட் பூரூஸ்.. தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக தங்கபாலு இருந்த போது.2006_சட்டமன்ற தேர்தலில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ராபர்ட் பூரூஸ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டபோதும். ஜி.கே. வாசனின் தலையீட்டல்.அகில இந்திய காங்கிரஸ் தலைமை ராபர்ட் பூரூஸ்யை வேட்பு மனுவை திரும்ப் பெற செய்தது. வாசன் ஆதரவாளரான பிரின்ஸ் காங்கிரஸ் வேட்பாளராக வேட்பு மனு செய்தவர் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் குளச்சல் சட்டமன்ற தொகுதியை தக்கவைத்து வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் ராபர்ட் பூரூஸ் பெயர் கடைசி வரை பரிசிலினையில் வரும், கடைசியில் வாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தொடர்ந்து போட்டியிடும் நிலையில். நெல்லை தொகுதியில் கடும் போட்டிக்கு மத்தியில்,அகில இந்திய காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியில் தென் இந்திய திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிய சமூகம் என்ற நிலையில் பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் பூரூஸ் கை ஆளவேண்டிய முறை சரியாக திட்டமிட வேண்டிய கட்டாயத்தில், நாங்குநேரியில் நெல்லை,குமரி பிரச்சார மேடைக்கு வரும் போது காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் மேடைக்கு வந்து விட்டதே ஒரு தொடக்க வெற்றியோ.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *