உக்ரைனில் சிக்கி உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடல் விரைவில் நாடு கொண்டுவரப்படும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் இருந்து வெளியேறிவருகின்றனர். ஐநா வெளியிட்ட தகவலின்படி 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் தங்கி மருத்துவம் பயின்றுவந்த கர்நாடகாவை சேர்ந்த நவீன் மார்ச் 1ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் நவீன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தனர். இது தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நவீன் வீட்டிற்கு நேரில் சென்று 25 லட்சத்திற்கான காசோலையை நவீன் பெற்றோரிடம் வழங்கினார். மேலும் நவீன் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து உக்ரைனில் போர் சூழல் குறைந்த பிறகு நவீனின் உடல் நாடு கொண்டுவரப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அதுவரை உக்ரைனில் இருக்கும் நவீனின் உடல் பாதுக்காப்பாக வைக்கப்பட்டும் என்று தெரிவித்துள்ளார்.