தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் முக்கியமான ஒருவர் சூரி. சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் இதுவரை வெளிவந்த படங்கள் எல்லாமே ஹிட் தான். ‘
சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கர், ரஜினி முருகன், இது நம்ம ஆளு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் காமெடியில் கலக்கி இருப்பார் சூரி. படங்களில் நடிப்பதை தாண்டி சூரி மதுரையில் அம்மன் உணவகம் வைத்துள்ளார். முதல் உணவக திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றிருந்தார். அதன்பிறகு அடுத்தடுத்து உணவகங்கள் திறந்த சூரி 9 அம்மன் உணவகம் திறந்துள்ளார் என்கின்றனர்.கடந்த பிப்ரவரி 20ம் தேதி கூட ஒரு புதிய உணவகம் திறந்துள்ளார், அந்த வீடியோவை சூரி வெளியிட்டிருந்தார்.
நடிகர் சூரி ஒரு பிஸியான காமெடி நடிகர் தான். அடுத்தடுத்து எதற்கும் துணிந்தவன், விடுதலை, டான், விருமன் போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இன்று மகளிர் தினம் அணுசரிக்கப்படுகிறது, அனைவருக்கும் பெண்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். நடிகர் சூரியும் தனது மகளுடன் எடுத்த கியூட் வீடியோவை வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.