மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மைக்காலமாக கொண்டு வந்துள்ள பல்வேறு சட்டங்கள் மூலம் மக்கள் விரோத அரசாக கருதி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த மூன்று சட்டங்கள், மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்த புதிய மசோதா சட்டம், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டுவந்துள்ள சட்டங்கள் அனைத்துமே நாடு முழுவதும் மிகப்பெரிய ஒரு போராட்டத்தை உருவாக்கியுள்ளது.

அந்த வகையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நடைமுறையில் இருந்து வந்த 1996ஆம் ஆண்டு சட்டம் கட்டிட கட்டுமான தொழிலாளர் சட்டம், 1996 ஆம் ஆண்டு சட்டம் நலவாரிய சட்டம், 1979 ஆம் ஆண்டு சட்டம் புலம்பெயர்ந்தோர் சட்டம் ஆகிய சட்டங்களின் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு புதிய சட்டங்களாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் ஏற்புடையதான சட்டமாக இது இல்லை. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டமாக இருப்பதால் இதனை வாபஸ் பெற கேட்டு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சிஐடிடி பிரிவு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் இன்று நாடு தழுவிய அளவில் மறியல் போராட்டத்தில் மறியல் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு பிரிவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று ராஜாக்கமங்கலம், தக்கலை மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று கட்டுமான தொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை மரணம் ஏற்பட்டால் 4 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும், அவர்களுடைய குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த போராட்டத்தின் மூலம் அரசுக்கு முன்வைக்கப்பட்டது.