• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேசிய பாட்டாளி கட்சி வீர முத்தரையர் சங்கம் அறிவிப்பு..,

Byமுகமதி

Jan 19, 2026

புதுக்கோட்டையில் தேசிய பாட்டாளி கட்சி வீர முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நிறுவனத் தலைவர் கருப்பையா முத்தரையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு அவரது நினைவு போற்றும் வகையில் மன்னரின் தபால் தலை வெளியிட்டதற்கு மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டது.

இந்நிகழ்வில் தேசிய பாட்டாளி கட்சியின் மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி பல்வேறு தீர்மானங்களை அறிக்கையாக வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய முத்தரையர் சமுதாயம் கல்வி அரசு வேலைவாய்ப்பில் பின்தங்கிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசும் மாநில அரசும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு 10.5% வழங்க வேண்டும்.

நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் தங்களது கட்சிக்கு தற்போது உள்ள அரசியல் கட்சி கூட்டணிகளில் எந்த கூட்டணி தங்களுக்கு ஐந்து தொகுதிகளையாவது ஒதுக்கித் தருகிறதோ இந்த கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பது, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் முத்தரையர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்,

உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளாக தங்களது சமுதாயத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும், தமிழகத்தில் 29 உட்பிரிவுகளைக் கொண்டு வாழும் முத்தரையர்கள் பல்வேறு பட்டப்பெயர்களில் வெவ்வேறு மாவட்டங்களில் கொடுக்கப்படும் சாதி சான்றிதழ்களை ஒரே மாதிரியாக முத்தரையர் என்ற சாதி சான்றிதழாக தமிழக அரசு வழங்கி தர வேண்டும்,

புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுடைய திரு உருவச் சிலையை அமைத்து தர வேண்டும்,
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுக முத்தரையர் அவர்களுடைய பெயரை சூட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது,

2026 பிப்ரவரியில் முடியும் மாநிலங்களவை உறுப்பினர் நியமன பதவியினை திமுக மற்றும் அதிமுக கட்சி தலைமையானது முத்தரையர் சமுதாயத்திற்கு அந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை அறிக்கையாக இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகளும் திரளான பெண்களும் வந்து கலந்து கொண்டனர். நிறுவனத் தலைவர் கருப்பையா முத்தரையர் நிறைவாக சிறப்புரையாற்றினார்.