திண்டுக்கல் சிலுவத்தூரில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் என் எஸ் எஸ் முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாநில துணை தொடர்பு அலுவலர் சௌந்தர்ராஜன் முகாமை துவக்கி வைத்தார். சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இளையராஜா, செவாலியர் அகாடமி என் எஸ் எஸ் திட்ட அலுவலர் ஜூலியட் ரோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி , விபத்து நடந்த இடத்தில் அவசர கால உதவி குறித்து 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாநில தொடர்பு அலுவலர் சௌந்தரராஜன் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்திலே திண்டுக்கல் மாவட்ட என். எஸ். எஸ். மாணவர்கள் தான் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்.
நமது மாவட்ட மாணவர் பிரதமர் மோடியுடன் பேசும் அளவிற்கு நமது மாவட்டத்தில் திறமையான மாணவர்கள் உள்ளனர். நீங்கள் வெற்றி பெறுவதற்கு மக்களுடன் கலந்து உறவாட வேண்டும். அவருடைய பிரச்சினைகளை உங்கள் பிரச்சனைகளாக நீங்கள் ஏற்கும் போது தான். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு பாடத்திட்ட மட்டும் உதவாது. என் எஸ் எஸ் மூலம் மக்களிடம் எப்படி பழக வேண்டும். மக்களிடம் உள்ள பிரச்சனைகள் என்ன. அவர்களுக்கு எப்படி விழிப்புணர்வு செய்ய வேண்டும் .
ஆகியவற்றை நீங்கள் தெரிந்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும். இந்த நாட்டையும் முன்னேற்ற முடியும். நமது நாடு என்ற எண்ணம் உங்களுக்கு வளர வேண்டுமானால் என் எஸ் எஸ் முகாம் ஒன்றே சிறந்தது. செவாலியர் அகாடமி பள்ளி சிறப்பாக இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுக்குரியது, என்றார்.

இதில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி பேசியதாவது: மொபைல் போன்களால் உங்கள் மூளைகள் மழுங்கடிக்கப்படுகிறது. அதிகளவு புத்தகங்களை படியுங்கள். இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் அப்போது ரத்த சோகையில் இருந்து நீங்கள் விடுபடலாம். ஹார்மோன் சுரப்பிகள் மாற்றத்தால் நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அதை அறிந்து நாம் செயல்பட வேண்டும். அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வது தவறில்லை. அதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடாது. சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
ரோட்டு கடைகளில் விற்கும் உணவுகளை உண்ணக்கூடாது. ஆரோக்கியம் தான் நாளை சமுதாயத்தை உருவாக்கும். நீங்கள் விதை நெற்களாக நாளை சமுதாயத்தின் விளைச்சல்கள். இதை அறிந்து உங்கள் உடலை கோயிலாக, உள்ளம் சிறந்த ஆலயம் என்பதை அறிந்து, உடல், உள்ளம் ,மன ஆரோக்கியத்தை நீங்கள் பேண வேண்டும். என்றார்.




