• Sat. Feb 15th, 2025

தேசியசாலை பாதுகாப்பு மாதவிழா தலைகவச விழிப்புணர்வு

ByKalamegam Viswanathan

Jan 31, 2025

வாடிப்பட்டியில் தேசியசாலை பாதுகாப்பு மாதவிழா தலைகவச விழிப்புணர்வு
ஊர்வலம் நடந்தது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், ‘காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வளர்மதி, (போக்குவரத்து ) விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பொதுமக்கள் கூடும் இடங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிய அறிவுறுத்தியும் அதன் அவசியம் குறித்தும் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதில் ,
மதுரை வைகை இருசக்கர வாகன மெக்கானிக் பொதுநலசங்கம் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.