CBSE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சாந்த் அதுலானந்த் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது. இத்தடகளப் போட்டியில் அல்கெமி பள்ளி மாணவி ஹாசினி கோவிந்தராஜ் 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியைப் பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.






