• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கோவையில் 2ம் ஆண்டாக தேசிய மனிதவள மேம்பாட்டு தினம்..,

BySeenu

May 21, 2026

சர்வதேச மனிதவள மேம்பாட்டு தினத்தை கொண்டாடும் விதமாக கோவை ரூட்ஸ் குழும நிறுவனம் மற்றும் கோயம்புத்தூர் எச் ஆர் டி (HRD) சர்க்கிள் ஆகியோர் சார்பாக சர்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழா கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது.

விழாவில் ரூடஸ் குழும நிறுவனங்களின் இயக்குனர் கோவை மனித வள மேம்பாட்டு குழு நிறுவன தலைவரும், ஆன டாக்டர் கவிதாசன் தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் முனைவர் கண்ணன் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களில் மனித வள மேம்பாட்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்..

முன்னதாக விழாவில் பேசிய அவர்,நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் தொழிலாளர் பிரச்னைகளில் மனிதவள மேம்பாட்டு துறை முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்..

தற்போது வேகமாக மாறி வரும் தொழில் நுட்ப மாற்றங்கள் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருப்பநாக தெரிவித்த அவர்,நவீன தொழில் நுட்பங்கள் எவ்வளவு வந்தாலும் அவற்றை மனிதர்களே கையாள்வதாக அவர் சுட்டி காட்டினார்..

நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்பொன்னுசாமி, ரூட்ஸ் நிறுவனங்களின் தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…