இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்அஞ்சலி செலுத்த மதுரை கிராமங்களிலிருந்து பரமக்குடி செல்கின்ற அரசு பேருந்து இயக்கிட வேண்டும்- தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை*
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரத்குமார் மற்றும் மூர்த்தி தலைமையில் நலச் சங்கத்தின் நிர்வாகிகள்உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் என்னும் 30க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் சரத்குமார் கூறியது, ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி அமைப்புகள் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களும் 10 லட்சத்திற்கு மேல் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு சொந்த வாகனத்தில் மட்டுமே பரமக்குடி சென்று வர நிபந்தனை விதித்தது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் வசிக்கும் கிராமங்களுக்கு அரசு போக்குவரத்து வசதி செய்து வருகிறது. அதேபோன்று மதுரை மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு சொந்த வாகனம் இல்லாத காரணத்தினால் பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அரசு போக்குவரத்து வசதி செய்து தருவதற்கு அரசிடம் அனுமதி பெற்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு வருகின்ற செப்டம்பர் 11 அன்று மதுரையிலிருந்து பரமக்குடி செலவதற்க்கு அரசு பேருந்து இயக்கிட அனுமதி வழங்கிட வேண்டும் எனக் கூறினார்.