• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேசிய கல்விக் கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சியே – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ByA.Tamilselvan

Oct 2, 2022

தேசிய கல்விக்கொள்கை என்பது காவி,இந்தியை திணிக்கும் முயற்சியே என கேரளாவில் நடைபெறும் சிபிஐ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது.
. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, திமுக-கம்யூனிஸ்டும் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் திமுக கொடியின் நிறத்தில் கூட பாதி சிவப்பு உள்ளது. மாநில அரசின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் கல்வி உரிமைகளும் பறிக்கப்படுகிறது என்பதால் எதிர்க்கிறோம். தேசிய கல்விக் கொள்கை என்பது காவி கொள்கையாக உள்ளது. காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்விக் கொள்கை. நேரடியாக செய்ய முடியாதவைகளை சட்டத்தின் போர்வையில் செய்யப் பார்க்கிறார்கள். ஆளுநரை ஏவி மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. மாநிலங்கள் நகராட்சி போல் மாறி வருகின்றன. அது இருக்கும் இடம் தெரியாமல் பின்னால் தள்ளப்பட்டுள்ளன. நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்களை அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொண்டவர்களால் கேட்கப்படுவதுதான் மாநில சுயாட்சி. மாநில சுயாட்சி, மதச்சார்பின்மையை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். சகோதரத்துவம், சம தர்மம், சமூகநீதியை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்ற பட வேண்டும். நமது அரசியலமைப்பு சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது மாநிலங்களின் கோரிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.