• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் வேட்பு மனு தாக்கல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக பாரதிய ஜனதா ,தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த தொண்டர்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அமர்நாத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் மாற்று வேட்பாளராக ஜான்பாண்டியனின் மகள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.