• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நத்தம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

Byவிஷா

Mar 27, 2023

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது.