கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 4 கோடிக்கும் அதிகமாக இங்கு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெறுவதால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து 4 மடங்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் முட்டை கொள்முதல் விலையும் அதிகரித்தது. கத்தாருக்கு மாதம் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 1லு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. கத்தாருக்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கால்பந்து போட்டி காரணமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.