• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினிக்கு நான்காவது முறையாக மேலும் 30 நாட்களுக்கு பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. தனது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 27-ம் தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக 3 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று (27.04.2022) சிறைக்கு திரும்ப இருந்தார். இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா, நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்ததை அடுத்து 4-வது முறையாக வரும் 26.05.2022 வரை மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.