• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உட்பட..,ஊழியர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அதிகாரி உட்பட வனத்துறை ஊழியர்கள் 8 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வனத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் நுழைய இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பறவைகள் கணக்கெடுப்பு துவங்கும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை தினசரி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. நேற்று 927 இன்று 804 ஆகவும் குறைந்துள்ளது. இருந்தாலும் பரவல் வேகம் குறையவில்லை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் உள்ள வனத்துறை அதிகாரி வனத்துறை ஊழியர்கள் உட்பட 8 பேருக்கு ஒரே அலுவலகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வனத்துறை அலுவலகத்தில் இன்று முதல் பொதுமக்கள் பிற அரசுத்துறை ஊழியர்கள் உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக சுகாதாரத்துறையினர் வனத்துறை அலுவலகத்தில் சென்று கிருமிநாசினி மருந்து அடித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் நாளை மறுநாள் பறவை கணக்கெடுக்கும் பணி தொடங்க இருந்த நிலையில் அந்த பணிகளும் வனத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் அதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வனத்துறை அலுவலகத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாகர்கோவில் வனத்துறை அலுவலகம் – கிருமி நாசினி மருத்துகள் தெளித்தல். அலுவலகத்திலும் கிருமி நாசினி மருத்துகள் தெளித்தல்.