குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 1_லட்சம் மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காது அல்லல், முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ் வழங்கப்படவில்லை. மாணவ, மாணவிகள் பாதிப்பு என தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலை கழக வேந்தருமான மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான பட்ட சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலை கழக வேந்தருமான மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் இன்று (02-05-2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலியில் இயங்கி வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான பட்ட சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் சுமார் 1 இலட்சம் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் நேரடியாக கல்வி பயின்று வருகிறார்கள். இப்பல்கலைக்கழகத்தோடு இணைந்த 104 கல்லூரிகளும், 6 பல்கலைக்கழக கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகள் வாயிலாக சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2023-ம் ஆண்டிற்கான பட்ட சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படவில்லை. மேலும் பட்ட சான்றிதழ்கள் பெறுவதற்குரிய கட்டணத்தையும் ஏற்கனவே மாணவ, மாணவிகள் செலுத்தி உள்ளார்கள். இருந்த போதிலும் பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படாதது படித்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. ‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கல்வியின் பெருமையை எடுத்துரைத்த முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியார் தோன்றிய தமிழ் மண்ணில் இது போன்ற நிலைமை கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஏற்படலாமா? கல்வியில் பிற மாநிலங்களை விட முந்தி நிற்கும் தமிழகத்தில் இந்த அவல நிலை தொடரலாமா?
பட்டம் படித்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வேலை வாய்ப்பு நிறுவனங்களிலிருந்து வேலை வாய்ப்புக்கான அழைப்புகள் வந்தும் பட்டப் படிப்புக்கான சான்றிதழ்கள் இல்லாததால் வேலை வாய்ப்பை இழக்கின்ற அவல நிலை எற்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகதத்திற்கு தகவல்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஒருங்கிணைந்து போராட்டக்குழு அமைக்க உள்ளதாகவும், முதற்கட்டமாக சம்மந்தப்பட்ட கல்லூரிகளில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பொற்றுள்ளன.
இந்த அலட்சியப் போக்கினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக நிர்வாகம் கைவிட்டு போர்க்கால அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கிட வேண்டும். மேலும், இது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக் கழக வேந்தருமான மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளின் நலன் கருதி இதில் தனிக் கவனம் செலுத்தி, தீர்வு காண உரிய நடவடிக்கையினை விரைந்து எடுத்து மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கிட வேண்டும். கன்னியாகுமரி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அறிக்கையில் கூறியுள்ளார்.