• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கழுகுமலை கோயிலில் என்.எஸ். கிருஷ்ணன் பேத்தியின் கணவர் சத்யா சாமி தரிசனம்

ByM.maniraj

Jul 16, 2022

கழுகுமலை கோயிலில் பழம் பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி ரம்யா வின் கணவர் சத்யா சாமி தரிசனம்.
ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியின் வாரிசான விஜய் டிவி வேலைக்காரன் தொடர் புகழ் சத்யா கழுகுமலை செந்தூர் நகரில் உள்ள சித்தர் அகஸ்தியர் குடிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு குருபரதேசி சித்தர் குருசாமி ஆசி வழங்கினார். தொடர்ந்து அவர் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை‌ தரிசனம் செய்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரில் நடித்து உள்ளார். மேலும் முன்னறிவான் திரைப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்க இவர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் பிரபுதேவா உடன் முசாசி படத்திலும் நடித்து வருகிறார். இவர் மறைந்த பழம் பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி ரம்யாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.