• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த மாடல் அழகி சடலமாக மீட்கப்பட்ட மர்மம் !

ஓராண்டுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை சமூக வலைதளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய ரஷ்ய மாடல், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.
23 வயதான கிரெட்டா வெட்லர் ஒரு ரஷ்ய மாடல். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ரஷ்ய அதிபர் புதினை மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என விமர்சித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு வெகு நாள்களுக்குச் சமூக வலைதளங்களில் சத்தமே இல்லாமல் போனார்.

இந்த நிலையில், கிரெட்டா வெட்லர் தற்போது சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கிரெட்டா வெட்லரின் முன்னாள் காதலர் டிமிட்ரி கொரோவின்,நான்தான் கிரெட்டா வெட்லரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்’ என ஒப்புக்கொண்டதாக டெய்லி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கிரெட்டா வெட்லரை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், பின்னர் அவளின் சடலத்தை ஒரு சூட்கேஸில் அடைத்துவைத்து, அதனுடன் மூன்று நாள்கள் தங்கியிருந்ததாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும், கிரெட்டா வெட்லர் இறந்தது தெரியக் கூடாது என்பதற்காக கிரெட்டா வெட்லரின் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டுவந்ததாகவும், அதிகாரிகளிடம் டிமிட்ரி கொரோவின் கூறியிருக்கிறார்.