• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் பரவும் மர்மக்காய்ச்சல்:
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!

Byவிஷா

Jun 13, 2022

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் விருதுநகர் கூரைகுண்டு பஞ்சாயத்துக்குட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் தலைவலி, சளி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.
இந்த நிலையில் இன்று அல்லம்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வீடுகளின் தொட்டிகளில் உள்ள தண்ணீரில் கொசுக்கள் மற்றும் புழுக்கள் ஏதும் இருக்கிறதா என்பதனை ஆய்வு செய்தார். அப்படி தேங்கி இருந்தால் அதன் மூலம் மர்ம காய்ச்சல் பரவும் எனவும், ஆகையால் அப்படி சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி போட்டு முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், மேலும் சேமித்து வைக்கும் தண்ணீரில் முறையாக மருந்து தெளித்து அதனை பஞ்சாயத்து நிர்வாகமும், வீட்டில் உள்ளவர்களும் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அவர்கள் தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வின்போது கூரைகுண்டு பஞ்சாயத்து தலைவர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, போத்திராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.