மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டி கிராமத்தில் 38 வயதான மாற்றுத்திறனாளி பாண்டிச்செல்வி என்பவர் வாய் கொதறிய நிலையில் காயங்களுடன் மர்மமான முறையில் மரணம் ..
நாய் கடித்து அவர் இறந்ததாக தகவல்.. ஏற்கனவே திருமணம் ஆன பாண்டிசெல்வி மலம்பட்டி அருகே பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வரும் பொள்ளாச்சியை சேர்ந்த திருமலைச்சாமி என்பவர் உடன் தனியாக 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்டம் மேலூர் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பாண்டிச்செல்வியின் உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாய் கடித்து இறந்தாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடித்ததாக கூறப்படும் நாயும் உயிரிழந்து கிடப்பதால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.