• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் மீது டிப்பர் லாரி மோதி விபத்து!

BySeenu

Aug 28, 2026

கோவை மாவட்டம், கோவைப்புதூரில் உள்ள சிபிஎம் கல்லூரி, அறிவொளி நகர் சாலையில் நடைபெற்ற கோர விபத்து. ஒரேமோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது, அந்த பைக் மீது டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயனம் செய்த நபர், ஒருவர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் பைக்கில் பயணம் செய்த இருவர் கவலைக்கிடமான நிலையில் சாலையில் விழுந்து கிடந்தனர் அவர்களை மீட்ட பொது மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.