கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை பொதுக்குழு மூலமே முடியும் நிர்வாகிகள் நியமனத்துக்கு எனது கடிதமே செல்லும் பாமக தலைவர் அன்புமணி பேச்சு,
பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸ்க்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அன்புமணியை விமர்சித்தும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து பேசினார்.

இதையடுத்து ராமதாஸின் இந்த செய்தியாளர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தநிலையில் பாமக தலைவர் அன்புமணி இன்று சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், ஒன்றியம், நகரம்,பேரூர், ஊராட்சி மற்றும் மாநில நிர்வாகிகளையும் காலை மற்றும் மாலை இரண்டு வேளை சந்தித்து கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல். ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
காலை ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த நிலையில் இன்று மாலை இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் இடையே பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
பாமக கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டை தயார் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது அதில் க்யூ ஆர் கோடு கொடுக்கப்பட்டுள்ளது அதில் கட்சி உறுப்பினர்கள் முதல் கட்சி நீதிக்கு பணம் செலுத்தலாம்.
உறுப்பினர் அடையாள அட்டை பெற்றபின் க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து 5 ரூ. உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். கட்சிக்கு அதிகளவிலான நிதி தேவைப்படுகிறது,எனவே உறுப்பினர் கட்டணமாக 5 ரூ.யுடன் கூடுதல் தொகையையும் உறுப்பினர்கள் செலுத்தலாம்.
சித்திரை மாநாட்டை நடத்தியது நான் அல்ல உறுப்பினர்களாகிய நீங்கள்தான், சித்திரை முழு நிலவு மாநாடு வெற்றி பெற பாமக தொண்டர்களே காரணம்.
சிறு பிரச்சனை கூட இல்லாமல் லட்சம் தொண்டர்கள் கூடினர்,சித்திரை மாநாட்டுக்கு பின் இளைஞர்களின் மனநிலை மாறி உள்ளது,சித்திரை மாநாட்டின் பின் பாமகவில் இணைவதற்கு அவர்கள் மனதளவில் தயாராக உள்ளனர்.
பனையூர் அலுவலகத்தில் இருந்து உறுப்பினர்கள் அனைவரின் செயல்பாடுகளையும் கண்காணிப்பேன்,2 ஆண்டுக்கு முன்பே இந்த வகை டிஜிட்டல் உறுப்பினர் அட்டையை தயார் செய்துவிட்டேன்.
ஆனால் அதை வெளியிடும் சூழல் இல்லாமல் இருந்தது அது என்ன என்பது உங்களுக்கு தெரியும். பாமக உறுப்பினர் அடையாள அட்டைகளை அடுத்தடுத்து டிஜிட்டல் மயப்படுத்த உள்ளேன்.
சில குழப்பங்கள் நடக்கலாம் அவை அனைத்தும் சரியாகிவிடும், அவற்றை சரிபடுத்தி விடுவேன,திலகபாமாவை நீக்கியதாக அறிக்கை வந்த சில நிமிடங்களில் அவர்தான் பொருளாளர் என நான் அறிக்கை கொடுத்தேன்.
கட்சியில் இருப்பவர்களை பொதுக்குழு மூலமே நீக்க முடியும் ,நான் பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்,மேலும் நிர்வாகிகள் நியமனம் குறித்து எனது கடிதமே செல்லும், பல பொறுப்புகளை நான் பார்த்து விட்டேன்,நான் என்னை தலைவராக பார்க்கவில்லை அடிமட்ட தொண்டனாகவே பார்க்கிறேன் உங்களுக்கு தலைமை தொண்டனாக நான் இருக்கிறேன்.
என் மனதில் நிறைய உண்டு இங்கு மீடியாக்கள் இருப்பதால் என்னால் இங்கு வெளிப்படையாக பேச முடியவில்லை. தனித்துப் போட்டியிடும் வகையில் மாற்றம் முன்னேற்றம் என்ற பிரசாரத்தை 2019 இருந்துதொடர்ந்து இருந்தால் நாம் இப்போது ஆட்சியில் இருந்திருப்போம் , ஆனால் அதை தொடர முடியாமல் போய்விட்டது.
உலகத்தில் நான் அதிகம் நேசிப்பது எனது அம்மாதான்,அவரும் என்னை அதிகமாக நேசிக்கிறார்,என் அம்மா மீது ஒரு துரும்பு கூட பட நான் விட மாட்டேன் , இதுவரையும் விட்டதில்லை இனியும் விடமாட்டேன்.
உங்களில் யாரை நீக்கி அறிவிப்பு வந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் நீங்கள் பொறுப்பில் தொடருவதாக நான் அறிக்கை வெளியிடுவேன். யாரிடமும் சண்டை வம்பு தும்புக்கு போக வேண்டாம்.
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த அடுத்தடுத்த செயல் திட்டம் உள்ளது,உரிமை மீட்பு பயணத்தை விரைவில் தொடங்க உள்ளேன். எனது செயல் திட்டங்களை செயல் படுத்தும் சுதந்திரம் தற்போது எனக்கு கிடைத்துள்ளது.
கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நான் துடித்துக் கொண்டுள்ளேன் என பேசினார்.