• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கைது அபாயத்திலிருந்து

Byadmin

Sep 3, 2025

பக்தனை காத்த முத்தாரம்மன்

அகத்தியரின் சாபத்தால் வர முனி என்ற முனிவர் எருமை தலையும் மனித உடலும் கொண்ட மகிஷ உருவத்தில் அசுர குலத்தில் பிறந்தார். அவரே மகிஷன்.  

கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும் பிரம்மதேவனிடமும் பல வரங்களைப் பெற்றான். இந்த வரங்கள் காரணமாக அவன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான்.

தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள்.  

சிவபெருமான் பார்வதியிடம்  உதவி பெற கூறினார். அடுத்து அன்னை தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அபயம் அளிக்க முன் வந்தாள்.

பின்னர் மகிஷாசுரனை வதம் செய்வதற்காக ஒன்பது அவதாரங்களை எடுத்து 9 நாட்கள் தவமிருந்து, பத்தாம் நாளில் காளி வடிவம் எடுத்து மஹிஷா சூரனை வதம் செய்து மஹிஷாசூரமர்த்தினியாக பக்தர்களுக்கு அருள் வழங்கினாள்.

இந்த நிகழ்வை எடுத்து கூறும் விதமாக  குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் ஆலயத்தில் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் ஒன்பது நாட்கள் அம்மன் தவம் செய்யும் நிகழ்வும்  பத்தாம் நாளான  விஜயதசமி அன்று மகிஷாசுரனை அன்னை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றன.

இந்த நிகழ்வுக்காக பக்தர்கள் பலர் காப்பு கட்டி பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கமாக இருக்கிறது.  

புரட்டாசி மாத அமாவாசை கழிந்த மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தசரா திருநாள்.

மைசூர்,  உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெறும் தசராவை விட, தமிழகத்திலே குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் ஆலயத்தில்  மிகப்பிரமாண்டமாக தசரா திருவிழா நடைபெறும்.

இந்த ஆலயத்தில் ஒரே பீடத்தில் வடக்கு திசையை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரர் ஆகவும்  அம்பாள் தாரம்மனாகவும் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர்.

குலசேகரப்பட்டினத்தில் அமைந்திருக்கின்ற இத்தகைய சிறப்புமிக்க திருத்தலத்தில் பத்து நாட்கள் மிக விமர்சையாக  பண்டிகை நடைபெறும். ‘

48 நாள் விரதம் இருந்து பின்னர் ஆயுத பூஜைக்கு முன் ஒரு பத்து நாட்கள் என்றால் அதில் மூன்று நான்காவது நாளில் காப்பு கட்டி அதற்குப்பின்    காளி வேடம் , தாடகை வேடம், குறவன் குறத்தி வேடம், பல சக்திகள் வேடம், குரங்கு வேடம், கிறுக்கு வேடம், உடம்பெல்லாம் புண் இருப்பது போன்ற வேடம், டாக்டர் வேடம், போலீஸ் வேடம், ராஜா ராணி வேடம் போன்ற பல வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை குறித்து குலசை முத்தாரம்மனை வேண்டிக் கொண்டும்  நேர்த்திக்கடன், காணிக்கை செலுத்துவார்கள்.

குறிப்பாக பல கலைஞர்களை ஊக்குவிப்பார்கள்.   வில்லுப்பாட்டு, ரெக்கார்ட் டான்ஸ், குதிரை ஆட்டம், கரகாட்டம், கணியான் கூத்து, பல இசை நிகழ்ச்சிகள், பல பிரபல இசை கலைஞர்களை கூப்பிட்டு வருவதும், பல நாடக நடிகர்களை கூப்பிட்டு வருவதும், நடிகர்களை அழைப்பதும்  இந்த தசரா பண்டியில் மிகவும் விமரிசையாக இருக்கும்.  

வாண வேடிக்கை போடுவதும், பல அலங்கார விளக்குகள், பல வித்தியாசமான செயல்கள் செய்வார்கள்.

இப்படிப்பட்ட தசரா திருவிழாவுக்காக  தெற்கு உடைபிறப்பு கிராமத்தைச் சேர்ந்த சு.ஜெயபாரத் நாடார் குழுவாக சேர்ந்து  அன்னதானம்  செய்வார். இதற்காக வசூல் செய்வதற்காக அவர் சென்னை செல்ல வேண்டியிருந்தது.

ஒவ்வொரு வருடமும்  சென்னையில் தசராவுக்கு வசூல் செய்ய செல்வது வழக்கம். 2008 ஆம் ஆண்டிற்கான வசூலுக்கு  ஜெயபாரத் நாடாரை, அவருடைய சித்தப்பா, மற்றும் அவருடைய அண்ணன், தம்பி ஆகியோர் அழைத்தனர்.

அப்போது ஜெயபாரத் காளி வேடத்திற்காக 58 நாள் விரதம் மேற்கொண்டு இருந்தபடியினால்  வெளியூர் செல்ல  அன்னையின் உத்தரவு இல்லை, பலமுறை அன்னை முத்தாரம்மனிடம் முறையிட்டும் உத்தரவு வரவில்லை.

தசரா பண்டிகையின் போது நடக்கும் அன்னதானத்திற்கு சேவை செய்யும் அன்னதான குழுவினரும் பலமுறை அவரை வற்புறுத்தியும் அவர் செல்லவில்லை. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக வசூல் கிடைக்கும் என்றும் கூறினார்.

வசூல் தொடங்கிய முதல் நாள் சென்னை பள்ளிக்கரணையில் . ஜெயபாரத் நாடாருக்கு சொந்தமான செல்போன்  கடை ஒன்றில் அன்று இரவு 8 மணி போல அரும்பாக்கத்தை சேர்ந்த  காவல் நிலைய அதிகாரி,  செல்போன் திருடும் திருடனை கூப்பிட்டுக் கொண்டு சென்றிருக்கிறார்.  

கடையில் உள்ள பையனிடம்,  ‘இந்த திருடன் உன் கடையில் தான் திருட்டு செல்போன் விற்றுள்ளான்’  எனக் கூறி ரூ.30,000 மதிப்புள்ள செல்போன்களை திருப்பிக் கேட்டுள்ளார்.

கடையில் வேலை செய்யும் பையன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் இன்ஸ்பெக்டர் கேட்கவில்லை. கடையின் உரிமையாளரான  ஜெயபாரத் நாடாருக்கு கடைப் பையன் போன் போட்டு விஷயத்தைச் சொல்ல… ஜெயபாரத் நாடாரும் இன்ஸ்பெக்டரிடம் போனில் பேசியிருக்கிறார்.

ஆனால் இன்ஸ்பெக்டரோ,  30,000   ரூபாய் அல்லது அதன் மதிப்பிலான செல்போன்கள் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லி கடையில் வேலை செய்யும் பையனை கைது செய்து அழைத்து சென்று விட்டார்.

ஜெயபாரத் நாடார் ஊரில் தசரா பண்டிகைக்கு விரதம் மேற்கொண்டு இருந்த நிலையில் அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.  அப்போது சென்னையில் தசரா வசூலில் இருக்கும் தனது நண்பர்களிடமும் விவரத்தை சொல்லி இருக்கிறார்.

மறுநாள் அரும்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் போய் வியாபாரி சங்கத் தலைவர்  மூலமாக கடைப் பையனை 10 பைசா செலவில்லாமல் வெளியே கொண்டு வந்தனர்.  இதற்கு அவர் மாப்பிள்ளை ஏ.தனுஷ் ராஜா மிகவும் உதவியாக இருந்து உள்ளார்.

ஜெயபாரத் நாடார்  சென்னையில் இருந்தால் அவரை கைது செய்திருப்பார்கள். அதனால்தான் அன்னை முத்தார அம்பிகை அவரை சென்னைக்கு போக விடாமல் தடுத்து இருக்கிறார்.

தனது பக்தருக்கு அவமானம் வரக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவும் சென்னை செல்ல அனுமதிக்கவே இல்லை.

குலசை முத்தாரம்மன் தன் பக்தர்களுக்கு பின்னால் வரும் பிரச்சனையை முன்னாலே உணர்ந்து அதை தடுத்து நிறுத்துவதில் அன்னைக்கு நிகர் அன்னையே.

அன்னை முக்காலத்திற்கும் தலைவி அல்லவா?

முத்தாரம்மன் மகிமைகள் தொடரும்