பழனியில் அனைத்து இஸ்லாமியர்கள் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் வட்டார ஜமாத்தார்கள் மற்றும் ஜமா அத்துல் உலமா சபை அனைத்து இஸ்லாமியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி மின்சார வாரிய அலுவலகம் எதிரே ஜமாத் தலைவர் முகமது அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரிய பள்ளிவாசலில் இருந்து பேருந்து நிலையம் காந்தி மார்க்கெட் வழியாக ஒன்றிய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக வந்த இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறுபான்மையினர் இன மக்களை ஒடுக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும் வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக நகர செயலாளர் வேலுமணி தலைமையில் நர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
