• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முலாயம் சிங் யாதவ் மரணம் ..ராகுல் இரங்கல்

ByA.Tamilselvan

Oct 10, 2022

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ் காலமானதை முன்னிட்டு ராகுல்காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலயாம் சிங் யாதவ் இன்று காலை காலமானார்.இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உ. பி அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளது. மேலும் அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று உ.பி முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல்காந்தி தனது இரங்கல் செய்தியில்… “முலாயம் சிங் அடிமட்ட அரசியலுடன் தொடர்புடைய ஒரு உண்மையான போராளி.அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்.அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் அரசியல் கட்சிதலைவர்கள்பலரும் அவரின் மரணத்திற்கு தங்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.