• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆசியாவின் பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

ByP.Kavitha Kumar

Feb 14, 2025

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ள இந்தியா, தற்போது மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற முயற்சிக்கிறது. இந்தியா மட்டுமல்ல, இந்தியர்களும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து வருகின்றனர். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல இந்தியர்கள் உள்ளனர். தற்போது ஆசியாவின் 20 பணக்கார குடும்பங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஆசிய பணக்கார குடும்பங்களில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் பிடித்துள்ளது. மேலும் முதல் 20 இடங்களில் 6 இந்தியர்களின் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.7.85 லட்சம் கோடியாகும். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். 4-வது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் மிஸ்திரியின் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடியாகும். இவர்களின் குடும்பம் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறது.