• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பதி வெங்கடாசலபதிக்கு 1.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தார் முகேஷ் அம்பானி…

Byகாயத்ரி

Sep 16, 2022

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி திருப்பதி கோவிலக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் முகேஷ் அம்பானி ஆழ்ந்த தெய்வ பக்தி கொண்டவர் என்பதும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து உள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று மரியாதை கொடுத்தனர். இந்த நிலையில் சுவாமி தரிசனம் முடித்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தரிசனத்திற்கு பிறகு ஒன்றரை கோடி ரூபாய் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.