• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முடுவார்பட்டி ஸ்ரீ ஆதி பூமி காத்த அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு உற்சவ விழா

ByN.Ravi

Oct 6, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, முடுவார்பட்டி கிராமத்தில், நல்லூர் கண்மாயில் அமைந்துள்ள நடுத்தெரு குட்டியா கவுண்டர்கள் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஆதி பூமி காத்த அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு கிடாய் வெட்டு உற்சவ விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த உற்சவ விழாவில், மறவபட்டி சென்று வேளார் இல்லத்தில் இருந்து குதிரை எடுத்து வந்து நடுத்தெரு பெரியம்மாள் சன்னதியில் பொங்கல் வைத்து சக்தி கிடாய் வெட்டி குதிரைக்கு
கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பெரியம்மாள் சன்னதியில் இருந்து புறப்பட்டு, அய்யனார் கோவில் சென்று பொங்கல் வைத்து, சக்தி கிடாய் வெட்டு நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்ட மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நடுத்தெரு குட்டியா கவுண்டர் பங்காளிகள், காமாட்சி அம்மன் கோவில் மாமன் மைத்துனவர்கள் செய்திருந்தனர். சுமார் 85 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த குதிரை எடுப்பு உற்சவ விழாவில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.