• Sat. Apr 26th, 2025

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி,பரிசுகள் வழங்கினார் எம்.பி. விஜய்வசந்த்..,

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குமரி மக்களவை விஜய்வசந்த்க்கு கல்லூரி என்சிசி மாணவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறுபான்மை ஆணையைத்தைச் சேர்ந்த காஜா கனி தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: போட்டி என்றால் அனைவரின் பங்களிப்புகளும் இருக்க வேண்டும்,இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் வெற்றியாளர்கள் தான், மாணவர்கள் சோசியல் மீடியாக்களில் மூழ்கி கிடக்காமல், அதனை பயன்படுத்தி, வெற்றியாளர்களாக மாற வேண்டும், கல்லூரியில் படிக்கின்ற காலங்கள் பொற்காலங்கள் ஆகும், படிப்பில் மட்டும் இருக்காமல் விளையாட்டுகளிலும் தங்கள் திறைமைகளை செலுத்த வேண்டும், கல்லூரி வாழ்க்கையில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது புதிய மனிதர்களாக வருகிறீர்கள், அப்போதும் பெற்றோர்களை மறந்து விடாதீர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறுபான்மை ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி, காங்கிரஸ் கட்சி அகில இந்திய பொது குழு உறுப்பினர்கள் ரத்தினகுமார், ஆரோக்கியராஜன் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.