அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற வாக்களிக்கின்ற உரிமையை மறுப்பது சரியானது அல்ல, வாக்காளர் சிறப்பு முறை திருத்தத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறியுள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தின் திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., தெரிவித்துள்ளதாவது:
SIR எனும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடத்துவதற்கான தேதி தேர்தல் ஆணையத்தால் 2025 டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் சிறப்பு முகாம்களில் கொடுக்கப்பட்ட படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வந்து சேராத பட்சத்தில் அந்த வாக்குகளை எல்லாம் இடம் பெயர்ந்த வாக்குகள் என பதிவு செய்து இருப்பதாக தெரிய வருகிறது.
தேர்தல் ஆணையம் நிச்சயத்திற்கும் தேதிக்கு முன்னதாகவே இத்தகைய முடிவுக்கு வருவது பொருத்தமானது அல்ல. எனவே, தாங்கள் இது குறித்து விசாரணை நடத்துவதுடன் இடம் பெயர்ந்த வாக்குகள் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் படிவங்கள் 2025 டிசம்பர் மாதம் 11-ம் தேதி வரை கொடுப்பதற்கான அவகாசத்தை வழங்கி அவர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
எந்த ஒரு நிலையிலும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற வாக்களிக்கின்ற உரிமையை மறுப்பது சரியானதல்ல என்பதை கவனத்தில் கொண்டு வாக்காளர் சிறப்பு முறை திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.








