• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

புதிய நியாய விலை கடை திறந்து வைத்த எம்பி டி.ஆர்.பாலு..,

ByPrabhu Sekar

Mar 16, 2026

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தின் திருவஞ்சேரி ஊராட்சியில் ரூபாய் 13.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர செயலாளரும், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர். ராஜா முன்னிலை வகித்தார். மேலும் புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.கே. ரவி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்சவேணி குணா, ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரசாத், ஒன்றிய அவைத்தலைவர் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருவஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி சுரேஷ்பாபு, துணைத் தலைவர் ருக்மணி சக்தி, வார்டு உறுப்பினர்கள் எஸ். நாகலிங்கம், எஸ். இமான்வேல், சூர்யா பொண்ணு வேல், ஜெயசௌந்தரி ஞானசேகரன், செல்வி பாபுஜி, மதுசூதனன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனுடன் கிளை கழக செயலாளர்கள் மகி மனோகரன், சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் ராபர்ட் பொன்வேல், சிவராஜ், கண்ணன், லோகதாஸ், கோவர்தன், ஸ்ரீதர், நித்தியா, நிஷாந்த், செந்தில், சுனில் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், ஊராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், திருவஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி சுரேஷ்பாபு அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.