கம்பத்தில் மின்சாரம் தாக்கி பலியான வாலிபரின் குடும்பத்திற்கு, தேனி எம்பி கம்பம் நகர்மன்ற தலைவர் ஆகியோர்கள் நிதி உதவி வழங்கினர்.
தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த முகமது இர்பான் என்ற இளைஞர் மற்றும் மகனின் இறப்பு கேட்டு அதிர்ச்சியில் உயிரை இழந்த தந்தை முபாரக் அலி ஆகியோரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்ற தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், இறந்த தந்தை மகன் இழப்பை ஈடு செய்யும் விதமாக அவர்களின் குடும்பத்தாருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியும், கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கம்பம் மெட்டு காலணி பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனிடம் வீடுகளுக்கு நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் உடனடியாக மின்சாரத்துறை அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசி இரண்டு நாட்களில் பாராளுமன்ற நிதியில் இருந்து அவற்றை சரி செய்து தருகிறேன் என உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியின் போது, திமுக மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன், டிஸ்கோ அலாவுதீன், நகர்மன்ற உறுப்பினர் தீன் மற்றும் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
