கருங்கல் அருகே 42 நாள் பெண் குழந்தையை கொ*லை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.

கருங்கலை சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று அதிகாலை குழந்தை மரணம் அடைந்தது.
பிரேத பரிசோதனையில், குழந்தையின் வாயில் டிஷ்யூ பேப்பர் திணிக்கப்பட்டது தெரியவந்தது. கணவர் குழந்தைக்கு அதிக பாசம் காட்டியதால் பொறாமையில் இவ்வாறு செய்ததாக பெனிட்டா ஒப்புக்கொண்டார்.
கருங்கல் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.