• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ByA.Tamilselvan

Dec 23, 2022

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு குளிர் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இன்று 1000 விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. பனிப்பொழிவால்விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், பேருந்து மூலம் மட்டுமே நீண்ட நேரம் பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.