• Fri. Jun 9th, 2023

தஞ்சாவூர் அருகே மின்கம்பியில் தேர் உரசியதால் 10 க்கும் மேற்பட்டோர் பலி

ByA.Tamilselvan

Apr 27, 2022

தஞ்சாவூர்: தஞ்சாவூரை அருகே நடந்த தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரை அடுத்த களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் இத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ் விழாவின் போது தேர் இழுக்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை வரா நடைபெறும். அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது தேர் திருவிழா. தஞ்சை பூதலூர் சாலையை அடுத்து களிமேடு பகுதியில் தேர் வரும் போது மின்கம்பத்தில் தேர் உரசியதால் 10 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் 10க்கும் மேற்பட்டோர் காயம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேரம் என்பதால் மின் தடை செய்யப்படவில்லை என தெரிகிறது. உயர்மின் அழுத்த கம்பியில் உரசி தேர் எரிந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *