மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இன்று வட்டாச்சியர் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இன்று வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் பணி நிமித்தமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில் தலைமையிடத்து துணை வட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்னும், வட்டாச்சியர் கலந்து கொள்ளும் நாளில் கூட்டத்தை நடத்துமாறு இன்று நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தலைமையிடத்து வட்டாச்சியர் ராஜ்குமார் தெரிவித்தார்.